தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில்
தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் தென்னாங்கூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். பாண்டுரங்கன் கோயிலின் கருவறை விமானம் அதன் உச்சியில் கோபுரக் கலசத்தடன் வட இந்திய பாணியில் கட்டப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தின் பூரி ஜெகந்நாதர் கோயில் விமானம் போன்ற அமைப்பில் இக்கோயில் விமானம் தோற்றமளிக்கிறது. இக்கோயிலின் மூலவர் பாண்டுரங்கன் மற்றும் தாயார் இரகுமாயி ஆவர். தலவிருட்சம் தமால மரம் ஆகும். கோயிலின் பின்புறம் பிருந்தாவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
Read article
Nearby Places
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3வது பெரிய நகரம். பிரித்தானிய - பிரஞ்சு போர் நடைப்பெற்ற இடம்.

தென்னாங்கூர்
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
பிருதூர்
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
வந்தவாசி பேருந்து நிலையம்

வந்தவாசி நகராட்சி
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி